உள்ளடக்கத்திற்குச் செல்லும்
  • முகப்பு
    • தனிப்பட்ட முறையில் மெசேஜ் அனுப்பலாம்தொடர்பிலேயே இணைந்திருக்கலாம்குழுக்களில் இணைகஉங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தலாம்பிசினஸுக்கான WhatsApp
  • தனியுரிமை
  • உதவி மையம்
  • வலைப்பதிவு
  • பிசினஸுக்கானது
  • பதிவிறக்கு
பதிவிறக்குக
விதிமுறைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கை2025 © WhatsApp LLC
WhatsApp முதன்மைப் பக்கம்WhatsApp முதன்மைப் பக்கம்
    • தனிப்பட்ட முறையில் மெசேஜ் அனுப்பலாம்

      முழு மறையாக்கம் மற்றும் தனியுரிமைக் கட்டுப்பாடுகள்.

    • தொடர்பிலேயே இணைந்திருக்கலாம்

      உலகம் முழுவதும் இலவசமாக* மெசேஜ் அனுப்பலாம், அழைப்புகளைச் செய்யலாம்.

    • குழுக்களில் இணைக

      குழு மெசேஜிங் எளிதாக்கப்பட்டது.

    • உங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தலாம்

      ஸ்டிக்கர்கள், குரல், GIFகள் மற்றும் பலவற்றின் மூலம் உணர்ச்சிகளை வெளிப்படுத்துங்கள்.

    • WhatsApp business

      உங்கள் வாடிக்கையாளர்கள் எங்கிருந்தாலும் அவர்களைச் சென்றடைந்திடுங்கள்.

  • தனியுரிமை
  • உதவி மையம்
  • வலைப்பூ
  • பிசினஸுக்கானது
  • செயலிகள்
உள்நுழைவுபதிவிறக்குக

WhatsApp மெசேஜிங் வழிகாட்டுதல்கள்

கடைசியாகப் புதுப்பிக்கப்பட்ட தேதி: பிப்ரவரி 16, 2024

WhatsApp என்பது மெசேஜ்களை அனுப்புவதற்கும் அழைப்புகளைச் செய்வதற்குமான எளிய, பாதுகாப்பான மற்றும் நம்பகமான வழியாகும். இயல்நிலையாகவே முழு மறையாக்கம் செய்யப்பட்ட உங்களது தனிப்பட்ட மெசேஜ்களை யாராலும், ஏன் WhatsAppனாலும் கூட பார்க்க முடியாது.

இந்த மெசேஜிங் வழிகாட்டுதல்கள் (இந்த "வழிகாட்டுதல்கள்") 1:1 அரட்டைகள், அழைப்புகள், குழு அரட்டைகள் மற்றும் சமூகங்களுக்குப் பொருந்தும். இந்த வழிகாட்டுதல்கள் ஸ்டேட்டஸ் புதுப்பிப்புகளுக்கும் பொருந்தும்.

WhatsApp Messenger செயலியின் பயன்பாடு பின்வருபவற்றின் மூலம் நிர்வகிக்கப்படுகிறது: எங்களது சேவை விதிமுறைகள் மற்றும் இந்த வழிகாட்டுதல்கள். WhatsApp Business செயலி மற்றும் WhatsApp Business தளம் உட்பட எங்கள் வணிகச் சேவைகளின் பயன்பாடு, இந்த வழிகாட்டுதல்களுக்கு மேலதிகமாக, WhatsApp Business சேவை விதிமுறைகள் மற்றும் பிசினஸ் கொள்கைகள் ஆகியவற்றின் மூலம் நிர்வகிக்கப்படுகிறது.

அடிப்படைக் கணக்கு, குழு மற்றும் சமூக சுயவிவரத் தகவல்கள், அத்துடன் பிற பயனர்களால் புகாரளிக்கப்பட்ட மெசேஜ்கள் உட்பட WhatsApp செயலிக்குக் கிடைக்கும் வரையறுக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எங்கள் சேவை விதிமுறைகள் அல்லது இந்த வழிகாட்டுதல்களை மீறுவதற்கு எதிராக WhatsApp நடவடிக்கை எடுக்கக்கூடும். உங்களின் தனிப்பட்ட மெசேஜ்களும் அழைப்புகளும் எப்போதும் முழு மறையாக்கம் மூலம் பாதுகாக்கப்படும்.

  • சட்டவிரோதமான உள்ளடக்கத்தைப் பகிரவோ சட்டவிரோதச் செயலில் ஈடுபடவோ கூடாது இதில் குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் அல்லது ஆபத்தில் ஆழ்த்தும் உள்ளடக்கம் (குழந்தை பாலியல் துஷ்பிரயோகம் உட்பட) அல்லது பயங்கரவாதத்தைச் சார்ந்ததாகக் கூறப்படும் அமைப்புகள் அல்லது தனிநபர்களை ஆதரிக்கும் உள்ளடக்கம் ஆகியவை அடங்கும். உங்களுக்குப் பயன்படுத்த உரிமை இல்லாத அறிவுசார் சொத்துக்களைப் பகிராதீர்கள். வன்முறை குற்றங்கள், மற்றவர்களுக்கு எதிரான வன்முறை, மனித கடத்தல் அல்லது சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகம் ஆகியவற்றிற்கான ஏற்பாட்டு பணிகளைச் செய்யவோ ஒருங்கிணைக்கவோ கூடாது.
  • விநோதமான நடத்தையில் ஈடுபடாதீர்கள். இதில் WhatsApp ஒருமைப்பாடு அமைப்புகளை குறைமதிப்பிற்கு உட்படுத்த முயற்சி செய்வது, புகாரளிக்கும் கருவிகளை துஷ்பிரயோகம் செய்வது, பயனர் கணக்குகளை கைப்பற்றுவது, தரவுகளை அகற்றுவது அல்லது அதிகாரப்பூர்வமற்ற கிளையன்ட்டுகளைப் பயன்படுத்துவது, மொத்தமாக மெசேஜ் அனுப்புவது, தானியங்கு மெசேஜிங், தானியங்கு டயலிங் அல்லது WhatsApp அல்லது எங்கள் பயனர்களுக்குத் தீங்கு விளைவிக்க தானியங்கு அமைப்பைப் பயன்படுத்துவது ஆகியவை அடங்கும்.
  • மோசடி அல்லது ஸ்பேமிங்கில் ஈடுபடாதீர்கள் இதில் WhatsApp பயனர்களுடன் தேவையின்றி மீண்டும் மீண்டும் மேற்கொள்ளப்படும் தொடர்பு, மற்றும் நோக்கம் கொண்டு ஏமாற்றுவதன் மூலம் அல்லது ஆள்மாறாட்டம் செய்வதன் மூலம் WhatsApp அல்லது எங்கள் பயனர்களை ஏமாற்றும் அல்லது மோசடி செய்யும் செயல்பாடு ஆகியவை அடங்கும்.

இந்த வழிகாட்டுதல்களை மீறக்கூடிய WhatsApp தொடர்புகள், குழுக்கள், சமூகங்கள், ஸ்டேட்டஸ் புதுப்பிப்புகள் அல்லது குறிப்பிட்ட மெசேஜ்களைப் பயனர்கள் புகாரளிக்கலாம். WhatsApp இல் எவ்வாறு புகாரளிப்பது என்பது பற்றி இங்கே தெரிந்து கொள்ளலாம். சாத்தியமான அறிவுசார் சொத்துடைமை மீறல்களைப் புகாரளிப்பது பற்றிய தகவல்களுக்கு, இங்கே பாருங்கள்.

மெசேஜிங் வழிகாட்டுதல்களை நாங்கள் எவ்வாறு பயன்படுத்துகிறோம்

WhatsApp ஆனது கணக்கு, குழு மற்றும் சமூக சுயவிவரத் தகவல்கள், அத்துடன் புகாரளிக்கப்பட்ட மெசேஜ்கள், இந்த வழிகாட்டுதல்களின் சாத்தியமான மீறல்கள் உள்ளிட்டவற்றைக் கண்டறிந்து மதிப்பாய்வு செய்ய, தானியங்கு செயலாக்க நுட்பங்கள் மற்றும் மனித மதிப்பாய்வுக் குழுக்கள் இரண்டையும் பயன்படுத்தக்கூடும்.

தானியங்கு செயலாக்கம்

தானியங்கு தரவு செயலாக்கம் ஆனது எங்கள் மதிப்பாய்வு செயல்முறையின் மையமாகத் திகழுகிறது, மேலும் கணக்கின் நடத்தை அல்லது புகாரளிக்கப்பட்ட மெசேஜ் உள்ளடக்கம் இந்த வழிகாட்டுதல்களை மீறும் வாய்ப்பு அதிகம் உள்ள சில பகுதிகளுக்கான முடிவுகளைத் தானியங்குபடுத்துகிறது.

தானியங்கு அமைப்பானது சரியான பொருள் மற்றும் மொழி நிபுணத்துவம் கொண்ட மனித மதிப்பாய்வாளர்களிடம் விதிகளை மீறக்கூடிய கணக்குகள், குழுக்கள் அல்லது சமூகங்களை கொண்டு செல்வதன் மூலம் மதிப்பாய்வுகளை முன்னுரிமைப்படுத்தவும் விரைவுபடுத்தவும் உதவுகிறது, அப்போதுதான் எங்கள் குழுக்கள் மிக முக்கியமான நிகழ்வுகளின் மீது முதலில் கவனம் செலுத்த இயலும்.

மனித மதிப்பாய்வு குழுக்கள்

ஒரு கணக்கு, குழு அல்லது சமூகத்திற்கு கூடுதல் மதிப்பாய்வு தேவைப்படும்போது, இறுதி முடிவை எடுப்பதற்காக எங்கள் தானியங்கு அமைப்புகள் அதை மனித மதிப்பாய்வுக் குழுவிற்கு அனுப்புகின்றன. எங்கள் மனித மதிப்பாய்வுக் குழுக்கள் உலகம் முழுவதும் இருக்கின்றனர், இவர்கள் ஆழ்ந்த பயிற்சியைப் பெற்றுள்ளனர், மேலும் இவர்கள் பெரும்பாலும் சில கொள்கைப் பகுதிகள் மற்றும் பிராந்தியங்கள் குறித்து நிபுணத்துவம் பெற்றவர்களாக உள்ளனர், கணக்கு விவரம் மற்றும் புகாரளிக்கப்பட்ட மெசேஜ்களை மதிப்பாய்வு செய்யக்கூடியவராகவும் உள்ளனர். தனிப்பட்ட மெசேஜ்கள் முழு மறையாக்கம் மூலம் பாதுகாக்கப்படுகின்றன. எங்கள் தானியங்கு அமைப்புகள் ஒவ்வொரு முடிவுகளிலிருந்தும் கற்றுக்கொண்டு மேம்பட்டு வருகின்றன.

உள்ளூர் சட்ட மீறல்கள்

WhatsApp இல் உள்ள கணக்குகள், குழுக்கள் அல்லது சமூகங்கள் உள்ளூர் சட்டத்தை மீறுவதாக அரசாங்கங்கள் நம்பும் சூழலில், எங்களுக்குக் கிடைக்கும் கணக்கு விவரத்தை மதிப்பாய்வு செய்யும்படி அவர்கள் கோரலாம். தனிப்பட்ட மெசேஜ்களும் அழைப்புகளும் எப்போதும் முழு மறையாக்கம் மூலம் பாதுகாக்கப்படுகின்றன. WhatsApp கணக்குகளைக் கட்டுப்படுத்துவதற்கான நீதிமன்ற உத்தரவுகளையும் நாங்கள் பெறக்கூடும். எந்தவொரு நடவடிக்கையையும் எடுப்பதற்கு முன், அரசாங்கக் கோரிக்கையின் சட்டபூர்வமான தன்மையையும் முழுமைத்தன்மையையும் நாங்கள் எப்போதும் மதிப்பிடுகிறோம்.

நாங்கள் எடுக்கக்கூடிய நடவடிக்கைகள்

சட்டவிரோத உள்ளடக்கம் அல்லது எங்கள் விதிமுறைகள் மற்றும் கொள்கைகளை மீறுவது குறித்து எங்களுக்குத் தெரியவந்தால், உள்ளடக்கம் அல்லது மீறலின் தன்மையைப் பொறுத்து பின்வருபவை உள்ளிட்ட நடவடிக்கையை நாங்கள் எடுக்கக்கூடும்:

  • இந்த வழிகாட்டுதல்களை மீறும் பயனர்களுக்கு எச்சரிக்கை அனுப்பக்கூடும்
  • எங்கள் சேவையிலிருந்து ஒரு கணக்கை தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக நிறுத்திவைக்கக்கூடும்
  • குழுக்கள் மற்றும்/அல்லது சமூகங்களில் மேற்கொண்டு செயல்பாட்டைத் தடுக்கக்கூடும் [கூடுதல் தகவல் இங்கே]
  • எங்கள் சர்வர்களிலிருந்து விதிமீறும் கணக்கு அல்லது குழு சுயவிவரத் தகவல்களை அகற்றக்கூடும்
  • ஒரு குழு அல்லது சமூகத்தின் அழைப்பு இணைப்பைப் பயன்படுத்துவதை ரத்து செய்யக்கூடும் அல்லது தடுக்கக்கூடும் மற்றும்/அல்லது
  • NCMEC மற்றும்/அல்லது சம்பந்தப்பட்ட ஆணையங்களிடம் குழந்தை பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான தகவலைப் புகாரளிக்கக்கூடும்

WhatsApp சேவை விதிமுறைகளில் காட்டப்பட்டுள்ளபடி கூடுதல் நடவடிக்கைகளையும் நாங்கள் எடுக்கக்கூடும்.

தரவிறக்குக
WhatsApp முதன்மை லோகோ
WhatsApp முதன்மை லோகோ
தரவிறக்குக
நாங்கள் வழங்கும் சேவைகள்
அம்சங்கள்வலைப்பூபாதுகாப்புபிசினஸுக்கானது
நம்மைப் பற்றிய தகவல்
எங்கள் சுயவிவரம்தொழில்வாய்ப்புகள்பிராண்டு மையம்தனியுரிமை
WhatsApp ஐ பயன்படுத்துங்கள்
ஆண்ட்ராய்டுiPhoneMac/PCWhatsApp Web
உதவி தேவையா?
எங்களைத் தொடர்பு கொள்ளளுங்கள்உதவி மையம்செயலிகள்பாதுகாப்பு ஆலோசனைகள்
தரவிறக்குக

2025 © WhatsApp LLC

விதிமுறைகள் & தனியுரிமைக் கொள்கை
தளவரைபடம்